சேவாக் பேட்டிங்கில் தீவிரவாதி பாக்.வீரர் சாதிக் மொகமது புகழாரம்

புதன்கிழமை, 2 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, ஜன. - 3 - கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சே வாக் தீவிரவாதியை போல ஆடுகிறா ர். அவர் அதிரடியாக ஆடினால் தடுத்து நிறுத்துவது சிரமம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான சாதிக் மொகமது பாராட்டி இருக்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் தொடரில் நல்லெண்ணத் தூதராக சாதிக் இந்தியா வந்திருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவ க்க வீரரான மொகமது கொல்கத்தாவி ல் நிருபர்களைச் சந்தித்த போது, அவர் களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், சேவாக் நன்றாக பேட்டிங் செ ய்யும் போது தீவிரவாதியை போல எனக்கு தெரிகிறார். அவர் அபாரமாக ஆடும் பட்சத்தில் அவரை தடுத்து நிறு த்துவது சிரமம் என்றும் சாதிக் தெரிவி த்தார். தவிர, பாகிஸ்தான் அணியின் தற்போ தைய துவக்க வீரரான நசீ ர் ஜாம்ஷெட்டையும் அவர் பாராட்டினார். நசீர் டெ ஸ்ட் போட்டியில் பங்கேற்க நல்ல தகு தி உள்ளது என்றும் அவர் கூறினார். ஜாம்ஷெட்டின் பேட்டிங் தொழில் நுணுக்கம் சிறப்பாக உள்ளது. அவர் டெ ஸ்ட் போட்டியில் பங்கேற்றால் எதிர ணிக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பார். அவர் நிலைத்து நின்று ஆடத் துவங்கி னால் அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை குறைக்கும் என்றும் சாதிக் கூறினார். சேவாக்கையும், ஜாம்ஷெட்டையும் ஒப்பிடும் படி அவரிடம் கேட்ட போ து, சேவாக்கை விட நசீரையே தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். சேவாக் நிலைத்து ஆடுவதற்கு முன்பு நிறைய கேட்சுகளை அளிப்பார். இதில் 25 சதவீதம் முதல் சில ஓவர்களிலேயே அடங்கும். இதனால் அவரை எளிதாக அவுட்டாக்கலாம். ஆனால் ஜாம்ஷெட் நிலைத்து நின்று ஆடத் துவங்கினால் அவரை அவுட்டாக்குவது சிரமம் என்று ம் சாதிக் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே 3 போட்டிகள் கொ ண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ் தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: