முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் மீதான வழக்கில் தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.9 - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது திண்டுக்கல், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட செஷன்ஸ் கோர்ட்களில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு 3 கோர்ட்களும் விஜயகாந்துக்கு சம்மன் அனுப்பின. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பால்வசதந்தகுமார் விசாரித்து, கடலூர் கோர்ட் சம்மனுக்கு மட்டும் தடைவிதித்தார். மற்ற இரண்டு கோர்ட்களின் சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் அரவிந்த பாண்டியனும், விஜயகாந்த் சார்பாக வழக்கறிஞர் பாலாஜியும் ஆஜரானார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony