முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரியா பேட்மிண்டன்: சாய்னா பட்டம் வெல்வாரா?

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 9 - கொரியா சூப்பர் தொடர் பேட்மிண்ட ன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெக்வால் பட்டம் வெல்வாரா? 

கொரியா நாட்டின் தலைநகரான சியோலில் சூப்பர் தொடர் பிரீமியர் பேட்மிண்டன் போட்டி இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீராங்க னைகள் மற்றும் வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். 

கொரியா சூப்பர் தொடரில் பங்கேற்க இருக்கும் முன்னணி வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த தீவிர பயிற்சியுடன் வந்து உள்ளனர். இதனைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

கடந்த 2012 -ம் ஆண்டு சாய்னாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. எனவே இந்த சீசனில் முதல் போட்டி யான இதில் அவர் முத்திரை பதிப்பா ரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

கடந்த வருடம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நெக்வால் பேட் மிண்டன் பிரிவில் பங்கேற்று வெண்க லம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதன் மூலம் இந்தப் பிரிவி ல் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையும் அவர் புரிந்தார். 

இந்த வருடம் அனைத்து இங்கிலாந்து பேட்மிண்டன் மற்றும் உலக சாம்பிய ன்ஷிப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் பட்டத்திற்கு சாய்னா குறி வைத் து இருக்கிறார். 

இருந்த போதிலும், உலக நம்பர் - 3 வீராங்கனையான சாய்னா தற்போது கொரியா சூப்பர் தொடரில் பட்டத் தைக் கைப்பற்ற கவனம் செலுத்தி வரு கிறார். 

எஸ்.கே.ஹேண்ட்பால் அரங்கத்தில் நடக்க இருக்கும் முதல் சுற்றுஆட்டத் தில் நெக்வால் தாய்லாந்து வீராங்க னை சப்ஸ்ரீ டெரட்டநச்சாயை சந்திக்கிறார். 

எனவே இந்தச் சுற்று சாய்னாவுக்கு எளி தாக இருக்கும். அவர் கால் இறுதிக்கு முன்னேறி விடுவார். அதில் 6-ம் நிலை வீராங்கனை ரட்சனாக்கை சந்திக்கிறார். 

தாய்லாந்தின் இளம் வீராங்கனையான ரட்சனாக்கை வெற்றி பெறும் பட்சத்தி ல், அரை இறுதியில் நெக்வால் ஒலிம்பி க் சாம்பியனும், உலக நம்பர் - 1 வீராங் கனையுமான லீஜூரெய்யை எதிர்கொ ள்கிறார். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்றில் இந்திய வீரரான பருவபள்ளி கஷ்யப் இங்கிலாந்தைச் சேர்ந்த ராஜீவ் க்யூசெப்பை சந்திக்கிறார். 

2010 -ம் ஆண்டு காமன்வெல்த் அரை இறுதிச் சுற்றில் ராஜீவ் இந்திய வீரர் கஷ்யப்பை வென்றார். ஆனால் தற் போது கஷ்யப் நல்ல பார்மில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர் மோசமாக ஆடி வருகிறார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் முத ல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரா  ங்கனை பி.வி. சிந்து லிண்டாவெனி பனேட்ரியை எதிர்கொள்கிறார். இந்தி ய பேட்மிண்டன் அரங்கில் சிந்து புதிய நட்சத்திரமாக உருவாகி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago