முக்கிய செய்திகள்

நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      தமிழகம்
Jaya3 3

சென்னை, ஏப்.- 19 - திருவாவூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ப.கண்ணையன், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.சரவணன், நாகப்பட்டினம் திட்டுப்படுகை கிளை அவை தலைவர் ஜெயபாலின் மகள்கள் வினிதா, ஜெயந்தி ஆகியோரின் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான ப.கண்ணையன் உடல் நிலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆரம்ப காலம்முதல் கழக பணியாற்றி வரும் ப.கண்ணையன் நன்னிலம் பேரூராட்சி செயலாளராகவும், 1988 முதல் தொடர்ந்து நன்னிலம் ஒன்றிய செயலாளராகவும் நல்ல முறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பு சகோதரர் ப.கண்ணையனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.சரவணன் சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், அவரது மனைவி விமலாதேவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர் எஸ்.ஆர்.சரவணனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமலாதேவி விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப, எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், திட்டுப்படுகை கிளை அவை தலைவர் ஜெயபாலின் அன்பு மகள்களான வினிதா, ஜெயந்தி ஆகியோர் கொள்ளிடம் ஆற்று பள்ளத்தில் சிக்கி மூழ்கியதில் அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு செல்வங்கள் வினிதா, ஜெயந்தி ஆகியோரை இழந்துவாடும் அவர்களது தந்தை ஜெயபால் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: