ஆஸ்திரேலிய ஓபன்: அசரென்கா இறுதிச்சுற்றுக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 25 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அசரெ ன்கா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.  கலப்பு இரட்டையர் பிரிவில், மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஆகிய ஜோடிக ள் கால் இறுதியில் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறின. 

மகளிர் ஒற்றையர் பிரிவின் மற்றொரு அரை இறுதியில் ரஷ்ய முன்னணி வீரா ங்கனையான மரியா ஷரபோவா சீன வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் முக்கிய நகரமான மெல்போர்னி ல் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற் சாகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீராங்கனையா  ன விக்டோரியா அசரென்காவம், அமெரிக்க இளம் வீராங்கனையான ஸ்டீப ன்சும் மோதினர். 

இந்தப் போட்டியில் அசரென்கா 6- 1, 6 -4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக் க வீராங்கனை ஸ்டீபென்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

இந்தப் போட்டி சுமார் 1 மணி மற்றும் 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த ப் போட்டியில் அசெரன்காவின் வெற் றி குறித்து மாறுபட்ட கருத்து நிலவுகிறது. 

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அசரெ ன்கா கைப்பற்றும் பட்சத்தில் அவர் முதலிடத்தை தக்க வைப்பார் என்று தெரிய வருகிறது. இறுதிச் சுற்றில் அவர் சீன வீராங்கனையை எதிர்கொள்கிறார். 

மற்றொரு அரை இறுதி ஆட்டம் ஒன்றி ல் ரஷ்ய முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவாவும், சீன வீராங்க னை லீநாவும் பலப்பரிட்சை நடத்தினர். 

இதில் சீன வீராங்கனை லீநா சிறப்பாக ஆடி ரஷ்யாவின் கவர்ச்சி நட்சத்திர மான ஷரபோவாவை 6 -2,6  -2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். இந்தப் போட்டி சுமார் 1 மணி மற்றும் 33 நிமிடத்தில் முடிந்தது. 

இறுதிச் சுற்றில் சீன வீராங்கனை லீநா வை அசரென்கா தோற்கடித்தால் நம்ப ர் - 1 இடத்தை தக்க வைப்பார். இல் லாவிட்டால் அமெரிக்க வீராங்கனை செரீனா முதலிடத்தைப் பிடிப்பார். 

கலப்பு இரட்டையர் பிரிவின் கால் இறு திச் சுற்றில் செக். குடியரசைச் சேர்ந்த லூசி ஹிராடெக்கா மற்றும் செர்மாக் ஜோடி 7 -5, 6 - 4 என்ற செட் கணக்கில் பாப் பிரையான் மற்றும் சானியா மிர் சா இணையை வீழ்த்தியது. 

மற்றொரு கால் இறுதியில், ஆஸ்திரே லியாவைச் சேர்ந்த ஜர்மிலா மற்றும் மேத்யூ ஜோடி 5 -3, 3 -6, 13 -11 என்ற செட் கணக்கில் மகேஷ் பூபதி மற்றும் நாடியா பெட்ரோவா இணையை தோற்கடித்தது. 

முன்னதாக கலப்பு இரட்டையரில் லியாண்டர் மற்றும் வெஸ்னினா ஜோ டியும், ரோகன் பொபண்ணா ஜோடியு ம் தோல்வி அடைந்தன. இத்துடன் இந்தியாவின் சவால் ஆஸி. ஓபனில் முடி வுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: