முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் இல்லை

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், ஜன. 26  - கமலஹாசனின் விஸ்வரூபம் படம் பெங்களூரிலும் நேற்று வெளியாகவில்லை. சட்டம் ஒழுங்கு காரணங்களால், தியேட்டர்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், படத்தை வெளியிட வேண்டாம் என்று விநியோகஸ்தர்களே இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர். 

இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்துக்கும் ஏற்படாத நிலை விஸ்வரூபத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் இப்போது மதப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் உணர்வுப்பூர்மானது, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசு படத்தைத் தடை செய்துவிட்டது. இது தொடர்பான போராட்டங்களுக்கும் 144 தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து கமல் உயர்நீதிமன்றத்துக்குப் போனார். 

ஆனால் அங்கும் நீதிபதி தடையை விலக்க மறுத்து விட்டார். எனவே தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகவில்லை. பல ஆயிரம் ரசிகர்கள் இதற்காக முன்பதிவு செய்திருந்தனர். அதற்கும் சரியான பதிலில்லை. இந்த நிலையில் பக்கத்து மாநிலங்களிலும் இந்தப் படத்தை திரையிட தயக்கம் காட்டியுள்ளனர். கர்நாடகத்தில் இந்தப் படம் வெளியாகவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை, மீலாடி நபி வேறு என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காட்டி பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இந்தப் படத்தை திரையிட எந்த தியேட்டர் மற்றும் விநியோகஸ்தரும் முன்வரவில்லை. ஒரு வேளை இன்று இந்தப் படம் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago