முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்கல் இன்று சுமத்ரா தீவுக்கு மேலே கடக்கும்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 15 - இன்று 2012 டி.ஏ. 14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது. பூமிக்கும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுக்கும் இடையே இந்த விண்கல் கடந்து செல்லப் போகிறது. பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் தான் நமது தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களும் வானிலை ஆய்வு செயற்கைக் கோள்களும் சுற்றிக் கொண்டுள்ளன. 

இந்த விண்கல்லை நாஸா பிரிவு நொடிக்கு நொடி கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அதன் பாதையையும் அதன் வேகத்தையும் கண்காணித்து வரும் இந்தப் பிரிவு, இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இன்று இந்திய நேரப்படி பகல் 11.55 மணிக்கு இந்த விண்கல் பூமியை மிக நெருக்கமாக வந்து செல்லும். அதாவது பூமியிலிருந்து 27,358 கி.மீ தூரம் அளவுக்கு நெருங்கி வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தோனேசியா மீது இந்த விண்கல் கடந்து செல்லும். குறிப்பாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேலே பூமியை இது கடக்கும். இந்த விண்கல்லின் பாதையை நாஸாவில் உள்ள சில இணைப்புகளை பயன்படுத்தி நேரடியாகவே காணலாம். இந்த விண்கல் சூரியனை வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்று. இது அடுத்தபடியாக 2046 ம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் 15 ம் தேதி பூமிக்கு அருகே வரும். அப்போது இது 27,358 கி.மீ அளவுக்கு மிக நெருக்கமாக வராது. இதன் பாதை விலகி சுமார் 10 லட்சம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago