முக்கிய செய்திகள்

உ.பி. சட்டசபையில் சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் அமளி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
UP-Assembly

 

லக்னோ,பிப்.22  ​ உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது எழுப்பிய கூச்சல் குழப்பத்தை அடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. 

நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் பதவி மற்றும் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகுக்கும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். காரணம், இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். பணபலம் விளையாடும் என்றுஅவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். எனவே கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த மசோதா குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று சமாஜ்வாடி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த மசோதா உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்தையே வேரறுத்து விடும் என்று வர்ணித்த சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான அம்பிகா சவுத்ரி அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மற்ற தலைவர்களும் அதையே வலியுறுத்தினார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை அடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: