முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஜிகிஸ்தானில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.15 - இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று புதுடெல்லியில் இருந்து தஜிகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். தஜிகிஸ்தானில் அன்சாரிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய ஆசிய நாடுகளில் தஜிகிஸ்தானும் ஒன்றாகும். இந்த நாட்டை தவிர கஜஹஸ்தான், உஜ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் மத்திய ஆசிய நாடுகளாகும். இந்த நாடுகள் முன்னாள் சோவியன் யூனியனில் இருந்து பிரிந்த நாடாகும். தஜிகிஸ்தானில் தாதுப்பொருட்களும் ஹட்ரோகார்பனும் அதிக அளவு உள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ள இந்திய முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தஜிகிஸ்தானுக்கு 4 நாள் பயணமாக துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி அங்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தஜிகிஸ்தான் அதிபர் இமோமெலி ரகுமோன் மற்றும் பிரதமர், ராணுவ அமைச்சர், பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சர்கள் ஆகியோர்களையும் சந்தித்து பேசுகிறார். அப்போது இந்திய தஜிகிஸ்தான் இடையே வர்த்தகம், ராணுவம் மற்றும் இருதரப்பு உறவை மேலும் வளர்த்துக்கொள்வது தொடர்பாக விவாதிப்பார். தஜிகிஸ்தான்-இந்தியா இடையே வர்த்தகம் அதிகரிக்க ஆப்கானிஸ்தான் வழியாக போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் தஜிகிஸ்தான் தலைவர்களுடன் அன்சாரி பேச்சுவார்த்தை நடத்துவார். ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் ஆப்கானிஸ்தானும் தஜிகிஸ்தானுக்கும் சுமார் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் எல்லைப்பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-தஜிகிஸ்தான் இடையே கடந்த 1992-ம் ஆண்டு உறவு ஏற்படுத்தப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு மே மாதம் தஜிகிஸ்தான் தலைநகரான துஷன்பியில் தூதரகத்தை இந்தியா திறந்தது. தஜிகிஸ்தானில் முக்கிய விமான நிலையமான அய்யினி கட்டுமான பணிக்கு இந்தியா பெரும் உதவி செய்தது. இன்னும் அந்த நாட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்தியா உதவி வருகிறது. தஜிகிஸ்தானுக்கு கடந்த 2003-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாயும், கடந்த 2009-ம் ஆண்டு இந்திய ஜனதாபதியாக இருந்த பிரதீபா பாட்டீலும் தஜிகிஸ்தானுக்கு சென்று வந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்