முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலை: வெட்டுத் தீர்மானத்திற்கு அமைச்சர் பதில்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 -  ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயு வெளியேறியது தொடர்பாக கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.   

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 55-ன் கீழ் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், க.பாலகிருஷ்ணன், கே.பாலபாரதி, ம.கலை அரசு, அ.கணேஷ்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோர்களால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில் அறிக்கை வருமாறு:-

இத்தொழிற்சாலைக்கு எதிராக நேஷனல் டிரஸ்ட் ஃபார் க்ளீன் என்விரான்மெண்ட் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்தொழிற்சாலையின் கடந்த கால நிகழ்வுகளையும், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் மண் மற்றும் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் இருப்பது அறியப்பட்டதை கருத்தில் கொண்டும் மற்றும் இதர ஆவணங்களை பரிசீலித்தும் கடந்த 28.9.2010 அன்று மேற்படி தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டது. 

உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடையுத்தரவு பெற்று தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டுஅதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேற்படிஅறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இத்தொழிற்சாலையை அறிவுறுத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து  கடந்த செப்டம்பர் 2012-ல் தொழிற்சாலையை ஆய்வு செய்து, அதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இதுவரை தொழிற்சாலையின் மீது வாரியம் மேற்கொண்ட கண்காணிப்பு பற்றிய ஆவணங்களை கடந்த 6.12.2012 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 2.4.2013 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பில் 2010-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து, ஆலையை செயல்பட அனுமதி வழங்கியதுடன் இவ்வாலை சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.100 கோடி அபராதமும் விதித்துள்ளது.

இதற்கிடையில் 23.3.2013 அன்று காலை 7 மணியளவில் தூத்துக்குடி கீழசண்முகாபுரம், புதுகாலனி பொதுமக்களிடமிருந்து கண் எரிச்சல் மற்றும் தொண்டை அடைப்பு முதலிய பாதிப்புகள் இருப்பதாக தொலைபேசி மூலம் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிப்காட் வளாகத்தினுள் செயல்படும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தொழிற்சாலையை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வாரிய உறுப்பினர் செயலரும் 24.3.2013 அன்று தொழிற்சாலையை ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது கீழ்கண்ட விவரங்கள் அறியப்பட்டது. 

தாமிர உருக்காலையின் குளிரூட்டும் குழாய்களில் ஏற்பட்ட கசிவினை சரி செய்ய 21.3.2013 அன்று உருக்காலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 23.3.2013 அன்று அதிகாலை துவக்கப்பட்டது. இத்தருணத்தில் (23.3.2013 அதிகாலை 2.15 ஏ.எம்.- 2.45 ஏ.எம்.) சென்னை வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தொடர் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமில பிரிவின் புகைப் போக்கியிலிருந்து வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடின் அளவு 2103.23 மி.கி.- க.மீ. இருந்து 2939.55 மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தர அளவு 1250 மி.கி.- க.மீ. விட அதிகமாக இருப்பது அறியப்பட்டது. 

மீண்டும் 23.3.2013 அன்று காலை 9.15 ஏ.எம்.- 11.15 ஏ.எம். மணியளவில் இதன் அளவு 1767.65 மி.கி.- க.மீ. இருந்து 2941.12. மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விட கந்தக டை ஆக்ஸைடு அளவு அதிகமாக பதிவாகியிருந்ததை அறிந்து இதனை உடனடியாக சரி செய்யும்படி வாரிய தொடர் காற்று தர கண்காணிப்பு மையத்திலிருந்து மின் அஞ்சல் மூலம் தொழிற்சாலைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சாலையிலிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை. 

23.3.2013 அன்று காலை மீளவிட்டான், அண்ணாநகர், பிரையன்நகர், ஜார்ஜ் ரோடு, திவிபுரம் ஆகிய பகுதி பொதுமக்கள் கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தூத்துக்குடிமாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் இப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை கேட்டுக்கொண்டார்.

சஐஞநஏ (சஹசிடுச்டூஹங் ஐடூஙூசிடுசிசீசிடீ ச்க் ஞஷஷசீஙீஹசிடுச்டூஹங் நஹக்டீசிநீ ஹடூக்ஷ ஏடீஹங்சிகீ) பரிந்துரைகளின் படி சுற்றுப்புறக் காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3)  -க்கு மிகைப்படும்போது மனிதனுக்கு கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனினும் மேற்குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் காற்றுத் தொடர் கண்காணிப்பு கருவி இல்லாமையால் சுற்றுப்புற காற்றில் கந்தக டை ஆக்ஸைடின் அளவை துல்லியமாக அறிய இயலவில்லை. மேலும் 23.3.2013 அன்று காலை அப்பகுதிகளில் மேற்படி புகாரின்படி சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு குறைந்தபட்சம் 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3)  அளவிற்கு அதிகமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.      

23.3.2013 அன்று நடந்த நிகழ்வுகளை அறிவுறுத்தி மூன்று நாட்களுக்குள் அதற்கான விளக்கம் அளிக்குமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் முகாந்திரக் கடிதம் அனுப்பியது. இதற்கு தொழிற்சாலை 27.3.2013 நாளிட்ட கடிதத்தில் விளக்கம் அளித்தது. அதில் 23.3.2013 அன்று கந்தக அமில நிலையத்தின் புகைப் போக்கியின் வழியாக வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடு வாயுவின் அளவை தொடர்ந்து அளவிடும் கருவியினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அத்தருணத்தில் மேற்படி கருவியின் அளவீடுகள் பராமரிப்பு நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை தமது தாமிர உருக்காலையை பராமரிப்பதற்காக தற்காலிகமாக நிறுத்துவதையும் மீண்டும் அதனை இயக்குவதையும் வாரியத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலை அவ்வாறு தெரிவிக்கவில்லை. வாரிய தொடர் கண்காணிப்பு மையத்தில் பதிவான அளவினை பரிசீலனை செய்யும்போது 23.3.2013 அன்று காலை தொழிற்சாலையின் கந்தக அமிலப் பிரிவிலிருந்து கந்தக டை ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்றில் கலக்கப்பட்டது உறுதி செய்யப்படுகிறது. இதுவே, பொதுமக்களின் புகாருக்கு காரணமாக இருந்திருக்கிறது. 

தொழிற்சாலையின் விளக்கத்தை நிராகரித்து 29.3.2013 அன்று வாரியம் பிரிவு 31 ஏ காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981-ன் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்.,) தாமிர உருக்காலை பிரிவினை மூடுவதற்கும் மற்றும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் உத்தரவிட்டது. அதன்படி 30.3.2013 அன்று தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

மேற்படி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 29.3.2013 நாளிட்ட மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பினை துண்டிப்பதற்கான உத்தரவு ஆகியவற்றை எதிர்த்து ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு 12.4.2013 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் விசாரணைக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது இடைக்கால உத்தரவில், இந்நேர்வு தொடர்பாக இரண்டு பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பதற்கும், இக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும் எனவும் இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து ஒருவரும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. மேலும், இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் 18.4.2013 அன்று வெளியிடப்படும் எனவும் இக்குழு ஆலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆலையை இயக்கி காட்ட வேண்டும் எனவும் இந்த ஆய்விற்குப் பின் நிபுணர் குழுவின் அறிக்கையை 29.4.2013 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்