ஐ.பி.எல். சூதாட்டம்: ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் கைது

வியாழக்கிழமை, 16 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே.17 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீ சார் கைது செய்துள்ளனர். 

6- வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த மாதம் 3-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் 9 அணிகள் பங்கே ற்று விளையாடி வருகின்றன. சென் னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன் ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 4-வது அணி எது என்பது இன்னும் முடிவாகவில்லை. 

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியி ல் விளையாடி வரும் டிராவிட் தலை மையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கிட் சவான், அஜித் சண்டிலா ஆகிய 3 வீரர் கள் ஸ்பாட் பிக்சிங் எனும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை டெல்லி போலீசார் கண்டு பிடித்தனர். 

இது தொடர்பாக 3 பேரையும் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர் நேற்று காலை கைது செய்தனர். 

ஐ.பி.எல். போட்டியில் நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில், மும் பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 

இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, தான் 3 வீரர் களும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தை டெலி போன் உரையாடல் மூலம் டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். டெல்லி போலீசார் மும்பை சென்று இந்த 3 பே ரையும் பிடித்தனர். 

ஸ்ரீசாந்த் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார். சண்டிலாவும், சவானும் வீரர்கள் தங்கி இருந்த நாரிமண் பாயிண்ட் ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர். 

இந்த 3 வீரர்கள் மீதும் 420 (மோசடி), 120 பி (கிரிமினல் சதி) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இது தொடர்பாக மேலும் 10 புரோக்க ர்களையும் டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: