முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.காம். பட்டதாரிகளும் இனி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் மத்திய அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 2 - பி.காம் படித்த பட்டதாரிகளுக்கு மத்திய அரசு ஒரு வரப்பிரசாத அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது, ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான தேர்வை எழுத பி.காம் பட்டதாரிகளையும் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்த முடியும்.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஆசிரியர்களுக்காக சில தகுதி விதிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. பட்டதாரிகள் மட்டுமே தகுதியானவர்கள் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு பி.காம் படித்த பட்டதாரிகளையும் சேர்த்து அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளின் சார்பில் ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சிலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ள தகுதியில் பி.காம் பட்டதாரிகளையும் சேர்த்து விடுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் பி.காம் படித்தவர்களும் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் நடத்தலாம். பி.காம் பட்டதாரிகளும் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களே என்பதை முறைப்படி அறிவிக்கும் அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஆசிரியர் பணிக்கு சேர விரும்பும் பி.காம் மாணவர்களின் லட்சியம் நிறைவேற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony