முக்கிய செய்திகள்

உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் ஒப்படைக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

Tamilnadu-State-Assembly-Election8 thumb 3

தேனி,மே.- 3 - தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி உள்ளாட்சி மன்றத்தலைவர்கள் ,நகர் மன்றத் தலைவர்கள்,ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள்,மாவட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களுக்கான வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இதன்படி,உள்ளாட்சி பிரதிநிதிகளின் வாகனங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று நகர் மன்ற தலைவர்களின் வாகனங்கள்,எட்டு ஊராட்சி ஒன்றியத் தலைவர்களின் வாகனங்கள் ,ஒரு மாவட்ட ஊராட்சித்தலைவரின் வாகனம்,ஒரு வேளாண்மை விற்பனைக்குழு தலைவரின் வாகனம் உள்ளிட்ட 13 வாகனங்களை தேர்தல் ஆணையம் பெற்றது.வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் கூட்டவும்,கூட்டத்தின் போது,புதிய தீர்மானம் போடவும்,தேர்தலுக்கு முன்பாகவே டெண்டர் விடப்பட்டு தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சிப்பணிகள் நடக்கவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.இதையடுத்து உள்ளாட்சி தலைவர்கள் தங்களது பகுதியில் நடக்கும் உள்ளாட்சிப்பணிகளை ஆய்வு செய்ய வசதியாக தங்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு வாகனங்களை திரும்ப தேர்தல் ஆணையம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தற்போது தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு வாகனங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: