முகாம்களில் உள்ளவர்களை விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தல்

Seeman 3

சென்னை, மே.3 -  செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும், nullந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்கு புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது. 

இந்நிலையில் கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெய மோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்க கோரி nullந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக அரசுக்கு எட்டவில்லை. உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் ந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ