முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வை கருணாநிதியும் எதிர்க்கிறார்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.30 - பெட்ரோல் விலையை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருவது:- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் விலை இன்றைய தினம் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2.32 என்ற அளவிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் டீசல் விலையும் மீண்டும் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பல்வேறு பொருள்களின் விலைகளும் உயர்ந்து மக்கள் தாங்கொணா தொல்லையில் சிக்குண்டிருக்கும் நிலையில், இயற்கை எரிவாயு விலையையும் சுமார் இரண்டு மடங்கு உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

எரிவாயு விலை உயர்வின் காரணமாக, மின் கட்டணம், யூரியா விலை போன்றவைகளும் உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஓ.என்.ஜி.சி. போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் ்டுபட்டுள்ளன.

இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசின் மின் துறை அமைச்சகமும், மத்திய உரத்துறை அமைச்சகமும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்த போதிலும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி நேற்றையதினம் விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டதால் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

மேலும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், யூரியா நிறுவனங்களுக்கும் மானிய விலையில் இயற்கை எரிவாயுவை விநியோகிக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களே மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும், அதுபற்றி பரிசீலித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் உறுதி கூறியிருக்கிறார்.

பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவைகளின் விலையை உயர்த்துவதால் மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமென்ற நிலையில், விலையை உயர்த்தாமல், அதற்கு மாற்று வழி காண மத்திய அரசு முன் வர வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago