osama-bin-laden

கெய்ரோ,மே.5 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் அவருக்கு செய்யப்பட்ட இறுதி சடங்குகள் குறித்து இஸ்லாமிய தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பின்லேடனை கடலில் அடக்கம் செய்தது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது என்று இஸ்லாமிய மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலால் அல்கொய்தா அமைப்பினர் மேலும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இறந்த பின்லேடனின் உடலை கடலில் அடக்கம் செய்ததன் மூலம் இஸ்லாமிய கோட்பாடுகளை அமெரிக்கர்கள் அவமித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: