எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் சி.பெருமாள்(62) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியாகும். இவரது மனைவி சரோஜா(52). இவர்களுக்கு ராஜேஷ்கண்ணா(37),தினேஷ் கண்ணா(36),சதீஷ்(30),கார்த்தி(28) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வாழப்பாடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பெருமாள் எம்.எல்.ஏ.விற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலை 6.15 மணியளவில் இறந்து போனார். அவர் இறந்த செய்தி அறிந்த நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எஸ்.கே.செல்வம்,எம்.கே.செல்வராஜ்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன், மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அதிமுகவினரும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் தீவிர விசுவாசியான அவர் இறந்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இறுதி அஞ்சலி செலுத்த பாப்பநாயக்கன்பட்டிக்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் கொடநாட்டில் இருந்துஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுமார் 80 கி.மீ.தூரம் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்கு கார் மூலம் 6.05 மணிக்கு வந்தார். எம்.எல்.ஏ.பெருமாளின் வீட்டிற்கு சென்று அங்கு கண்ணாடி பேழையில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அழுது கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.பெருமாளின் மனைவி சரோஜா முதல்வர் ஜெயலலிதாவை கண்டதும் கதறி அழுது அவரது காலில் விழுந்து அழுது புரண்டார். அவரை தூக்கி கையை பிடித்து அரவணைத்த முதல்வர் அவருக்கு ஆறுமுதல் கூறினார்.அப்போது அவர் எனது குடும்பத்திற்கு இனி யாருமே இல்லை என்ன? செய்வேன் என்று கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா எதற்காகவும் கவலை படவேண்டாம் நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிர கணக்கான மக்களை பார்த்து கும்பிட்ட முதல்வர் காரில் ஏறி சேலம், சங்ககிரி வழியாக கொடநாட்டிற்கு காரில் சென்றார்.
இறந்து போன பெருமாள் எம்.எல்.ஏ.வின் உடலுக்கு சபாநாயகர் தனபால்,துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி,சி.பி.வைத்திலிங்கம்,எடப்பாடி கே.பழனிசாமி,பழனியப்பன்,தாமோதரன்,கே.வி.ராமலிங்கம்,எஸ்.பி.வேலுமணி,செந்தில் பாலாஜி,பா.வளர்மதி,பா.மோகன், சுப்பிரமணியம்,சின்னையா,எம்.சி.சம்பத்,வைகை செல்வன்,தங்கமணி,தோப்பு வெங்கடாஜலம்,ஆனந்தன்,பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எம்.கே.செல்வராஜ்,எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன்,மாதேஸ்வரன், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.சேந்தமங்கலம் சாந்தி, அரூர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.டில்லி பாபு,சேலம் கலெக்டர் மகரபூஷணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சதீஷ்குமார்,சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட ஏராளமான அதிமுகவினரும்,பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கை குறிப்பு
மரணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது தன்னை அதில் இணைத்துக் கொண்டவர் ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதியில் போஸ்ட் ஆபீசில் கிளர்க்காக வாழ்க்கை தொடங்கி அவர் 1984 ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் கிளர்க்கா பணியாற்றி உள்ளார்.பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு 1984 ல் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது தோல்வியை தழுவினார்.1989 ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆத்தூர் வட்டார செயலாளராக இருந்த அவர் எம்.எல்.ஏ.ஆன பின்பு 1989 ல் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். பின்னர் 1991 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனார். 2001 தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.மீண்டும் 2011 ம் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்ட பெருமாள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.தற்போது ஏற்காடு தொகுதியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா சேலம் புறநகர் மாவட்ட பாசறை துணைச் செயலாளராக உள்ளார். இதில் 3 மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுவிட்டது.
ஜெ.வின் தீவிர விசுவாசி
மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ.பெருமாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.1989 ல் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ஏற்காடு தொகுதியில்தான் வாக்கு எண்ணிக்கை முதலில் முடிக்கப்பட்டு இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 1991 மற்றும் 2011 லும் இவருக்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்தார். தொகுதி மக்களிடையே நல்ல பெயர் பெற்றுள்ள பஸ்சில்தான் சென்று வருவாராம். இந்த முறை வெற்றி பெற்ற பின்புதான் லோன் மூலம் கார் வாங்கினார். அந்த காரின் நெம்பர் கூட டி.என்.77 ஜெ.7777 ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 6 days ago |
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு
02 Aug 2025சென்னை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.1,120 ஏற்றம் கண்டு விற்பனையானது. இதனால் ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
02 Aug 2025சென்னை, தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.
-
ஆணவப்படுகொலைக்கு உரிய நீதி: சீமான் உறுதி
02 Aug 2025சென்னை : ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என சீமான் உறுதியளித்துள்ளார்.
-
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
02 Aug 2025சென்னை : இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு
02 Aug 2025சென்னை, டாக்டர் அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
உத்திரமேரூர் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
02 Aug 2025சென்னை : உத்திரமேரூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா..? - மத்திய அரசு விளக்கம்
02 Aug 2025புதுடெல்லி : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
நடிகர் மதன்பாப் காலமானார்
02 Aug 2025சென்னை : திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் உடல்நலக்குறைவால் காலமானார்.
-
எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
02 Aug 2025சென்னை, தனது தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
-
த.வெ.க. நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் ஆனந்த் படத்தை பயன்படுத்த தடை
02 Aug 2025சென்னை, த.வெ.க. நிகழ்ச்சிகளில் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
-
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20-வது தவணை தொகையை விடுவித்தார் பிரதமர்
02 Aug 2025டெல்லி, பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.
-
ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கை குறித்து போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி
02 Aug 2025புதுக்கோட்டை, “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் முதல்வர்
02 Aug 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
பாலியல் வழக்கில் தண்டனை அறிவிப்பு: பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு 'ஆயுள்'
02 Aug 2025பெங்களூரு, பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர்..?
02 Aug 2025மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர்...
-
கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
02 Aug 2025சென்னை, பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் மாற்றி விடுதலை செய்யப்பட்ட கைதி
02 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் பெயர் குழப்பத்தால் கைதி மாற்றி விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 2 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
-
காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒரேநாளில் 106 பேர் பலி
02 Aug 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இ.பி.எஸ். வழிபாடு
02 Aug 2025தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழிபாடு செய்தார்.
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
02 Aug 2025தூத்துக்குடி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அறிக்கை: ராகுல் மீது ராஜ்நாத்சிங் தாக்கு
02 Aug 2025பாட்னா, ஒரு அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தகுதியானது அல்ல என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் க
-
ஆப்கன் வீரர் 43 பந்தில் 153 ரன்கள்
02 Aug 2025இங்கிலாந்தில் இ.சி.எஸ். டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்போர்டு அணியும் மோதின.
-
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
02 Aug 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
நீதிமன்றத்தில் அழுத ரேவண்ணா
02 Aug 2025பெங்களூரு : முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுதார்.