முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி டென்னிஸ் போட்டி: ஷரபோவா தோல்வி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 15 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் மரியா ஷர

போவா மற்றும் இவானோவிக் ஆகி யோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். மகளிருக்கான டபிள்யு.டி.ஏ.சங்கம் சார்பில் அமெரிக்காவில் உள்ள சின்

சினாட்டி நகரில் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் வீராங்கனைகள் தர மான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிக ர்களை மகிழ்வித்து வருகின்றனர். இதன் ஒற்றையர் பிரிவில் 2- வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ரஷ்ய நட்சத்திர வீராங்கனையான மரியா ஷரபோராவும், அமெரிக்க வீராங்கனை ஸ்டீபானிக்கும் மோதினர். 

இந்தப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபானிக் சிறப்பாக ஆடி, 6-2, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தார். 

மற்றொரு ஆட்டம் ஒன்றில் பெலாரசின் முன்னணி வீராங்கனையான விக்டோரியா அசரெகன்காவும், அமெரிக்க வீராங்கனையும் மோதினர். 

இதில் அனுபவம் மிக்க அசரென்கா அசத்தலாக ஆடி, 6-1,7-6 என்ற நேர் செட் கணக்கில் வானியா கிங்கை தோற்கடித்தார். 

டென்மார்க்கின் நட்சத்திர வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கியும், சீன வீராங்கனையும் முன்னதாக நடந்த முதல் சுற்றில் மோதினர். 

இதில் திறமை வாய்ந்த கரோலின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் அவர் 6-1, 6- 2 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை ஷாய் பெங்கை தோற்கடித்தார். செர்பியாவின் முன்னணி வீராங்கனையான அனா இவானோவிக் 6-2, 6-7,7-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் கார்

னெட்டிடம் தோல்வி அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago