முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் நாடக அரங்கின் கூரை சரிந்து 88 பேர் காயம்

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், டிச. 21 - இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரில் நாடக அரங்கின் கூரை சரிந்து விழுந்ததில் 88 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றிய விபரம் வருமாறு _ 

லண்டன் நகரத்தின் மேற்கு பகுதியில் அப்பல்லோ அரங்கம் உள்ளது. இங்கு வழக்கமாக வார இறுதி நாட்களில் நாடகம், இசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 

சுமார் 800 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி உடையதாக இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பால்கனி உள்ளிட்ட பல்வேறு வகுப்புகள் உள்ளன. 

இரவில் நாய்க்கு நடந்த பயங்கர சம்பவம் என்ற நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்ட நாடகம் ஒன்றிற்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

வழக்கம் போல ஏராளமானோர் தியேட்ட

ரில் குவிந்தனர். உள்ளே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகக் கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து உயிர் தப்பிய கலீர் அஞ்சர்வாலா என்பவர் கூறுகையில், நான் எனது கர்ப்பிணி மனைவி மற்றும் பெற்றோருடன் நிகழ்ச்சியை பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 

அப்போது திடீரென கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. நாடகத்தைப் பார்த்து தான் பார்வையாளர்கள் கூச்சலிடுகின்றனர் எ

ன்று முதலில் நாங்கள் நினைத்தோம். 

திடீரென தூசியும், புகையும் சூழ்ந்து கொண்டதில் அசம்பாவிதம் நடந்ததை புரிந்து கொண்டோம். எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாங்கள் அவசரப் பாதை வழியாக தப்பினோம் என்றார். 

இது குறித்து மீட்பு படை அதிகாரி கூறுகையில், தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இடிபாடுகளில் சிக்கிய 88பேரை மீட்டு அவர்களை பேருந்துமூலம்  அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்துள்ளோம் என்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்