முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 26 - இயேசுபிரான் அவதரித்த டிசம்பர் 25_ம் நாளான நேற்?றைய தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடி னர். சென்னை சாந்தோம் தேவாலயம் உள்பட தமிழகத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம்  நள்ளிரவு முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

மனித இனத்தின் பாவங்களுக்கு விடியலாக, உலகெங்கும் அன்பு தழைக்க அவதாரமாக கடவுள் தன் மகனை பூமிக்கு அனுப்பிய திருநாள் இந்த தினம். உலகெங்கும் உள்ள மக்கள் மத மாச்சர்யங்களைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் பொதுவிழாவாக இன்றைக்கு மாறி வருகிறது கிறிஸ்துமஸ். உலக நாடுகள் அனைத்திலும் நேற்று  கிறிஸ்துமஸ் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

கீழை நாடுகளில் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம் விளங்குகிறது. வேளாங்கண்ணி ஆலயத்தைப்போலவே சென்னை பெசண்ட் நகர் அன்னை மேரி ஆலயத்திலும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.சாந்தோமில் நடந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

சென்னை சாந்தோமில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் நள்ளிரவு திருப்பலி மற்றும் பிராத்தனை நிகழ்ச்சி நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இறைமகன் ஏசுவின் சீடர்களுள் ஒருவரான புனித தாமஸ் ரத்தம் சிந்திய மலையான தாமஸ் மலையில் உள்ள தேவாலயத்தில் 24_ம் தேதி தொடங்கி நேற்று காலை வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு நடந்த பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இயேசுவின் சீடர் உயிர் நீத்த இடத்தில் கட்டப்பட்ட இரண்டாவது தேவாலயம் என்ற சிறப்பு மிக்கது புனித தாமஸ் மலைத் திருத்தலம். இங்கும் புனித தாமஸ் தேவலாயத்தில் நடந்த திருப்பலி மற்றும் சிறப்பு பிராத்தனை நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல, சைதாப்பேட்டை சின்னமலை தேவலாயம், பெரம்பூர் தேவாலயம் போன்ற சென்னை நகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடந்த சிறப்பு பிராத்தனை நிகழ்ச்யில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்