முக்கிய செய்திகள்

கல்லூரி மாணவியை திருமணம் செய்யும் பூடான் மன்னர்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      உலகம்
Jetsun-Pema1

திம்பு,மே.22 - கல்லூரி மாணவியை பூடான் மன்னர் திருமணம் செய்கிறார். இந்தியாவை ஒட்டியுள்ள பூடான் நாட்டின் மன்னர் சிக்மிஹெசார் நம்செல்வாங்ஜங். 31 வயதான இவர் 2008 ம் ஆண்டு பூடானின் மன்னராக முடிசூடிக் கொண்டார். இவர் ஜெட்சென்பேமா என்ற 21 வயது கல்லூரி மாணவியை மணக்கிறார். தற்போது இவர் லண்டனில் உள்ள ரீஜென்ட்ஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை பாராளுமன்ற கூட்டத்தை தொடங்கி வைத்து மன்னர் வாங்ஜங் தெரிவித்தார். அப்போது அவர் சிரித்தபடியே தனது வருங்கால மனைவி யார் என்பதையும் வெளியிட்டார். வாங்ஜங் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: