எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத்,மே.- 23 - பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடுமையாக எச்சரித்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தானையொட்டி உள்ள மலைப்பகுதிகளில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் ஒளிந்திருந்திருக்கிறார்கள். அவர்களை ஒழிக்க அமெரிக்க அடிக்கடி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தனை காலமும் பொருத்துக்கொண்டியிருந்த பாகிஸ்தான், பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொலை செய்ததால் ஆத்திரமும் கோபமும் அடைந்துள்ளது. அதுவும் தமது நாட்டில் மறைமுகமாக அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்திருந்த பின்லேடனை எப்படியோ அமெரிக்க படைகள் கண்டுபிடித்து சுட்டுக்கொன்றுவிட்டதே என்ற ஆதங்கம் பாகிஸ்தானுக்கு தலைமேல் ஏறி இருக்கிறது. இதனால்தான் இந்த எச்சரிக்கையை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினெட் ஜெனரல் அமகத் சுஜா பாட்ஷா விடுத்துள்ளார். பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு உள்நாட்டிலும் பாட்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் துணை இயக்குனர் மைக்கேல் மொரெல் மற்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் சந்தித்து பேசினர். அப்போது இந்த எச்சரிக்கையை பாட்ஷா விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏவுகணை தாக்குதலை நிறுத்தும் வகையில் அமெரிக்க யுக்தி வகுத்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்க நேரிடும் என்று பாட்ஷா உறுதியாக தெரிவித்துவிட்டதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |