முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறன் விவகாரம்: பா.ஜ.க வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.3 - 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தயாநிதி மாறனுக்கு இருக்கும் தொடர்பு குறித்து பிரதமர் மவுனம் சாதிக்க கூடாது என்று பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியது, 

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தொடர்பாக மவுனம் சாதித்தது, அவருக்கு நற்சான்று கொடுத்தது ஆகியவை காரணமாக ஏற்பட்ட தலைகுனிவை பிரதமர் மறந்திருக்க மாட்டார். அதே தவறு தயாநிதி விவகாரத்திலும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். 2 ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தயாநிதி மாறனுக்கு உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ. அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டத்தை பா.ஜ.க. மேற்கொள்ளும். 

ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் உரிய முறையில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இந்த விவகாரத்தை எழுப்பி அவரை பதவியில் இருந்து நீக்கும் வரை போராட முடிவு செய்துள்ளோம் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!