முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுகாத்தி - பூரி ரயில் விபத்துக்கு காரணம் குண்டு வெடிப்புதான்

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,ஜூலை.12 - கவுகாத்தி-பூரி ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தததுதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து பூரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மாநிலத்தில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில் ரான்ஜியா-காக்ராபர் இடையே தாத்குசி என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 8 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 100 பேர் படுகாயம் அடைந்தனர். பதுக்கிவைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்ததில் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம்புரண்டன என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 8 பெட்டிகளில் 4 தலைகீழாக கவிழ்ந்தன. மீதி 4 பெட்டிகள் சுமார் 3 அடி ஆழம் தண்ணீர் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அதற்கான ப்யூஸ் ஒயர் மற்றும் பல கருவிகள் குண்டுவெடித்த இடத்தில் கிடந்தன. அசாம் மாநில அரசுக்கும் போடாலாந்து இயக்க பிரிவினர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு போடோலாந்து பிரிவை சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள்தான் குண்டை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து பார்வையிட்டனர். இந்த ரயில் விபத்தில் காயம் அடைந்த 100 பேர் கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 41 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் பூரிக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தையொட்டி ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிடும்படி மத்திய ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய்க்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். அதன்படி முகல்ராய் நேற்று விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு பயணிகளுக்கு செய்த உதவிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் இந்த விபத்துக்கு யார் காரணமாக இருக்கலாம் என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago