முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் உள்பட 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-​

பால் உற்பத்தி, பால் பொருள் மேம்பாட்டு துறை கமிஷனரும், ஆவின் நிர்வாக இயக்குனருமான விபு நாயர் மாற்றப்பட்டு, தொழில் மற்றும் வணிகவியல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கால்நடைத் துறை கமிஷனர் எம்.ஆர்.மோகன் மாற்றப்பட்டு, பால் உற்பத்தி, பால் பொருள் மேம்பாட்டு துறை கமிஷனரும், ஆவின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தொழில் மற்றும் வணிகவியல் இயக்குனர் அnullர்வ வர்மா மாற்றப்பட்டு, டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இந்தப் பதவியை ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நகர மற்றும் ஊரக திட்டத் துறை முன்னாள் இயக்குனர் பங்கஜ் குமார்பன்சால் மாற்றப்பட்டு, தமிழ்நாடு சுகாதாரப் பணிகள் திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை, செய்தித்துறை துணை செயலாளர் டி.பி.ராஜேஷ் மாற்றப்பட்டு, பொதுத்துறை துணை செயலாளராக (புரோட்டோகால்) நியமிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்