முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்குகளில் லக்னோ மருத்து அதிகாரி கைது

புதன்கிழமை, 13 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஜூலை.13 - 2 கொலை வழக்குகளில் லக்னோ முன்னாள் மருத்துவ தலைமை அதிகாரி ஏ.கே.சுக்லாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.  உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியாக சுக்லா இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தில் பெருமளவு ஊழல் நடந்தது.  இந்த ஊழல் வெளிவராமல் இருக்க இரண்டு முன்னாள் மருத்துவ அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி லக்னோவில் குடும்ப நலத்துறை தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்த பி.பி. சிங் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையையொட்டி லக்னோ மருத்துவ தலைமை அதிகாரி பதவியில் இருந்து சுக்லா நீக்கப்பட்டார். அதற்கு முன்னர் கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி மற்றொரு மருத்துவ தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் வினோத் ராய் ஆர்யா என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு முக்கிய படுகொலையிலும் பின்னணியாக இருந்ததாக துணை மருத்துவ அதிகாரி டாக்டர் ஒய்.எஸ்.சச்சன் என்பவர் கைது செய்யப்பட்டு லக்சோனை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையில் இருக்கும்போது மர்மமான முறையில் இறந்துகிடந்தார். சச்சன் மர்ம சாவு குறித்தும் இரண்டு மருத்துவ தலைமை அதிகாரிகள் படுகொலை செய்து குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற உள்ள நேரத்தில் மருத்துவ அதிகாரி சுக்லா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சத்ரபதி சஹூஜி மகாராஜா மருத்துவ பல்கலைக்கழக மயக்க மருந்து பிரிவு மையத்தில் சுக்லவை போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago