முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் 15 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.20 - நாட்டிலேயே ஆந்திர மாநிலத்துக்கு அதிகபட்சமாக கடந்த ஆண்டுல் 15 கோடியே 58 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் சுற்றுலா துறையின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்திக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த மாநிலத்துக்கு மட்டும் 15 கோடியே 58 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். 

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், புகழ் பெற்ற அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் உள்ள மகராஷ்டிரா மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை விட ஆந்திர மாநிலத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசம் 2 வது இடத்தையும், தமிழகம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்துக்கு கடந்த ஆண்டில் 14.48 கோடி பேரும், தமிழகத்துக்கு 11.16 கோடி பேரும் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர். 2010 ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.79 கோடியாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்துக்கு 28 லட்சமும், உததரபிரதேசத்துக்கு 17 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony