முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவின் சாதனைகள் குறித்து பிரச்சராரம் செய்ய தீர்மானம்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 21 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை வீதிவீதியாகச் சென்று திண்ணைப்பிரச்சாரம் செய்ய அ.தி.மு.க.  மாணவரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க. மாணவரணி  மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று அதிமுக தலைமை கழகத்தில் மாணவரணி மாநில செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு சோலை இரா.கண்ணன், எம்.டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  தென்சென்னை மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.ராமலிங்கம் வரவேற்று பேசினார். வடசென்னை மாவட்ட மாணவரணி செயலாளர் அ.அப்பாஸ் நன்றி கூறினார். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,  அமைப்பு செயலாளர்கள் வி.பொன்னையன்,  விசாலட்சி நெடுஞ்செழியன்,  சுலோச்சனா சம்பத்,  என்.தளவாய் சுந்தரம்,  செ.செம்மலை, ஆதிராஜாராம், ஆர்.கமலக்கண்ணன்,   அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், மகளிரணி செயலாளரும் அமைச்சருமான கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 தமிழகத்தில் 3வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா அரியணையில் அமர்ந்திட்ட முதல்நாளே முத்தான ஏழு திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்டு, முதன்மை மாநிலமாக தாய் தமிழகத்தை உருவாக்கிடும் வகையில் படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவி ரூ.25,000/-​ நிதி உதவியோடு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்றும், இளநிலைப்பட்டம், டிப்ளோமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.25,000/-​லிருந்து ரூ.50,000/-​ஆக உயர்த்தி வழங்குவதோடு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்றும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500/​ மாத ஓய்வு ஊதியம் ரூ.1,000/-​ ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், பொது விநியோகத்திட்டதின் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டை தாரர்களுக்கு 35 கிலோஅரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,000/-​ நிதி உதவியை ரூ.2,000/-​மாக உயர்த்தி வழங்கப்படுமென்றும், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளங்குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.  அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை  என்ற பெயரில் துறை ஒன்றைத் தொடங்கி இத்துறைக்கென தனி அமைச்சர் செயல்படுவார் என்றும் ஆணையிட்டு உலகத்திற்கே எடுத்துக்காட்டான உன்னத திட்டங்களை வாரி  வாரி வழங்கிவர், அரசு விழாக்களை எல்லாம் எளிமைக்கு எடுத்துக்காட்டாய் நடத்திக்காட்டி, எளிமைக்கு இலக்கணமாய், ஏற்றமிகு வரலாறு படைத்து,  உலக மக்கள் போற்றுகின்ற வகையிலே ஆட்சி நடத்தி வருகின்ற கழக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழகத்தின்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கழக மாணவரணி கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றது.

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டு  ஒட்டு மொத்த தமிழினத்தையே அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது  தனது ஆட்சியைக்  காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழினப் படுகொலையை கண்டித்து கேள்வி எழுப்பாத கையாலாகாத தமிழின துரோகி கருணாநிதியை தமிழினம் என்றைக்கும் மன்னிக்காது.  ஆனால் தமிழக சட்ட மன்ற வரலாற்றிலே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வகையில் போர்குற்றங்களில் ஈடுபட்டவர்களை  போர் குற்றவாளிகள் என்று பிரகடன படுத்த ஐ.நா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், சிங்களருக்கு இணையாக தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்றும், இதற்காக  இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதார தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியேற்றி வைத்திட்ட உலகத் தமிழர்களின் ஒரே தலைவி, தமிழினத்தின் மானம் காத்திட்ட தமிழ்த்தாய், வாழும் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில்  மாணவரணி தனது நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றது.

கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. சர்வாதிகார ஆட்சியினால் தமிழகத்தில் அனுதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல்,  மணல் கடத்தல், அரிசி கடத்தில், நிலஅபகரிப்பு என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது.  தமிழகமே சுடுகாடாக மாறி இருந்தது.  கருணாநிதியின் கையாலாகாத தனத்தால் ஏற்பட்ட இந்த அவல நிலை எல்லாம் அகற்றிட இங்கிலாந்து, ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறையை உருவாக்கி, சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, அமைதிப் nullங்காவாக தமிழகத்தை  மலரச் செய்து மேலும் தி.மு.க.வினரால் பொதுமக்களிடமிருந்து முறைகேடாக பறிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட நிலங்களை எல்லாம் மீட்டெடுத்து மீண்டும் உரிய உரிமையாளரிடமே  ஒப்படைக்கின்ற ஜனநாயக  நோக்கத்தோடு காவல்துறையில் நில அபகரிப்பு தொடர்பான தனிப் பிரிவை ஏற்படுத்தி ஏழை, எளிய, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட கழக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கழக மாணவரணி கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றது.

கடந்த கால கருணாநிதியின் காட்டுதர்பார் ஆட்சியால் தலை தாழ்ந்து கிடந்த தாய்த்தமிழகத்தை மீட்டெடுத்து இந்திய திருநாட்டின் முதன்மை மாநிலமாக அன்னை தமிழகத்தை உருவாக்கிட, தாய் தமிழகத்தை  தலை நிமிர்ந்திட, ஊன், உறக்கம் பாராது, இரவு பகல் பாராது, 24 மணி நேரமும் அயராது உழைத்து, உலகம் போற்றுகின்ற வகையிலே ஆட்சி நடத்தி வருகின்ற கருணையின் வடிவமே, உலகத்தை ஆளுகின்ற வல்லமையும்  ஆற்றலும் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வழிகாட்டி, வாழும் ஜெயலலிதா அகிம்சையையும் அரசியலையும் இரு கண்களாக கொண்ட பெண் மகாத்மா,  அரசியலையும் ஆற்றல் கொண்ட வீரத்தையும் இரு கண்களாக கொண்ட பெண் நேதாஜி,  அரசியலையும், ஆன்மீகத்தையும் இரு கண்களாக கொண்ட பெண் விவேகானந்தர், தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக கொண்ட தெய்வீகத்திருமகள், மக்கள் நலன் காக்கின்ற எண்ணிலடங்கா சட்டங்களை இயற்றிய  பெண் சட்ட மாமேதை, பள்ளி, கல்லுரிகள் பல தொடங்கி  மாணவ சமுதாயத்தின் கல்விக்கண் திறந்திட்ட பெண் பெருந்தலைவர், முதலமைச்சர் ஜெயலலிதா உலகத்திற்கே வழிகாட்டுகின்ற வகையில் தேர்தல் அறிக்கையில் தந்திட்ட மக்கள் நலன் காக்கின்ற புரட்சி  திட்டங்களையெல்லாம் வெற்றிகரமாக போர்க்கால அடிப்படையில்  நிறைவேற்றி வருகின்ற ஜெயலலிதா சரித்திர சாதனையை பள்ளி கல்லுரி மாணவ, மாணவியரிடத்திலே எடுத்துச்சென்று   மாணவர் அணியில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்திடவும் மேலும் வீடு வீடாக, வீதி வீதியாக, திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாக மக்களிடத்திலே எடுத்துச்சென்றிட கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.  இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: