முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சிக்கு 2 துணை கமிஷனர்கள் நியமனம்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டர் ஆனந்தகுமார் உள்பட 2 பேர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று  வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:​

ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டர் ஆர்.ஆனந்தகுமார் சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (பணிகள்) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த தாரேஷ் அகமது மாற்றப்பட்டு இருக்கிறார்.

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ.) திட்ட அதிகாரியும் கூடுதல் கலெக்டருமான அனீஸ் சாப்ரா சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த அனு ஜார்ஜ் மாற்றப்பட்டு உள்ளார்.

நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி முன்னாள் இயக்குனர் என்.மதிவாணன் வேளாண்மைத்துறை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago