முக்கிய செய்திகள்

குஜராத் சிறையில் இருந்து பாக். மீனவர்கள் விடுதலை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

வதோதரா,ஜூலை.- 25 - குஜராத் மாநில சிறையில் உள்ள 89 பாகிஸ்தான் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் விரைவில் வாகா எல்லைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.  மீனவர்கள் அனைவரும் அரபிக் கடல் பகுதியில் கட்டுப்பாட்டை மீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடலோர காவல் படையினரிடம் பிடிபட்ட அவர்கள் ஜாம்நகர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது தண்டனை காலம் இரண்டு தினங்களுக்கு முன் நிறைவடைந்ததையடுத்து இவர்களை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடைமுறைகளை குஜராத் மாநில போலீசாரும், மத்திய அரசு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இம்மாதம் 27 ம் தேதி இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் பேச்சு நடத்த உள்ள நிலையில் பாகிஸ்தான் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: