முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு: பாக். நீதிமன்றம் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூலை.- 26 - இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மும்பை தாக்குதல் வழக்கு வரும் ஆகஸ்ட் 10 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 126 பேர் பலியாயினர். மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாஹியூ ரஹ்மான் லக்வி உட்பட 7 பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் தற்போது பாகிஸ்தானில் உள்ளனர். இந்தியா அளித்த தகவலின் பேரில் பாகிஸ்தான் அரசு அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான லக்வியின் வக்கீல் காஜா சுல்தான், உடல்நிலை சரியில்லாததால் லக்வியால் ஆஜராக இயலவில்லை என்றும் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago