முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. மூத்த தலைவர் சிவகுமார் சாஸ்திரி மரணம்

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ராஜ்நந்த்கான்,மார்ச்.- 3 - பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சிவகுமார் சாஸ்திரி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92. சிவகுமார் சாஸ்திரியின் சொந்த மாநிலம் சட்டீஸ்கர். இங்குள்ள ராஜ்நந்தகானில் நகரில் நேற்று அவர் மரணமடைந்தார். கேசுபாஸ் தாக்கரே மற்றும் சுந்தர்லால் பட்வா ஆகிய தலைவர்களின் காலத்தை சேர்ந்தவர் சாஸ்திரி. இவர், பாரதிய ஜனதா கட்சியின் தாய்களமான ஜனசங்கத்தை தோற்றுவித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜ்நந்த்கான் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில முதல்வர் ராமன் சிங்கின் அரசியல் குருவாக சாஸ்திரி விளங்கினார். இதை ராமன் சிங்கே கூறியுள்ளார். சாஸ்திரி மரணத்திற்கு கட்சி பாகுபாடின்றி அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சாஸ்திரியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்