எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.9 - நான் இருக்கிற வரை நான்தான் அ.தி.மு.க.பொதுச் செயலாளர் அதன்பிறகுதான் தமிழக முதல்வர் என்று ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர் பேச்சுக்கு நடுவே முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். கம்யூனிஸ்ட் உறுப்பினர் க.குணசேகரன் பேசுகையில், நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமச்சீர் கல்வியை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அரசின் கொள்கையில் மாறுபட்ட கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனாலும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தி பாடத்திட்டங்களை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். சமச்சீர் என்பது பாடத்திட்டத்தில் மட்டுமல்லாது வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், ஆசிரியர் விகிதாச்சாரம் போன்ற எல்லா நிலையிலும் சமநிலையை உருவாக்கிடவேண்டும். ஒரே பாடத்திட்டமாக இருந்தாலும் தரமான கல்வி தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மத்தியிலே இருக்கிறது. அந்த எண்ணத்தில் தான் தனியார் பள்ளிகளை என்று கூறிக்கொண்டிருக்கும் போது,
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, ஒரு உறுப்பினரின் கன்னிப்பேச்சில் தலையிடக்கூடாது இருப்பினும், ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதனால் தான் குறுக்கிடுகிறேன். நான் அன்றைய அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், இன்றைய அ.தி.மு.க.பொதுச் செயலாளரும் நான்தான். நான் இருக்கின்ற வரை கட்சியின் பொதுச் செயலாளர் பிறகுதான் தமிழக முதல்வர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


