சங்கரன்கோவில் ஆடித்தபசு தேரோட்டம் விமர்சையாக நடந்தது

Image Unavailable

சங்கரன்கோவில் ஆக-10 -  சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் நேற்று ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் ஒன்றாகும். இக்கோவிலில் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுவது தவறு என்பதை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதியின் தவத்திற்கு இணங்க சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். இச்சிறப்பு மிக்க திருவிழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது. காலையும் மாலையும் கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெவ்வேறு திருக்கோலத்தில் வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மாலையில் திருக்கோவில் கலையரங்கத்தில் சிறப்பு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 9ம் திருநாளான நேற்று அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. தேரை திருக்கோவில் துணை ஆணையர் ராஜாமணி, கண்காணிப்பாளர் முருகானந்தம், நகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி பார்வதிசங்கர், சங்கரன்கோவில் யூனியன் தலைவி அன்புமணி கணேசன், சங்கரன்கோவில் தாசில்தார் சந்திரசேகரன், டிஎஸ்பி மதிவாணன், நகர அதிமுக செயலாளர் கண்ணன், நகர அவைத்தலைவர் மணி பட்டர், தேமுதிக முன்னாள் மாவட்ட பொருப்பாளர் திவ்யா எம்.ரெங்கன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கந்தவேல், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் தீக்கணல் லட்சுமணன், குருவிகுளம் ஒன்றிய பொருளாளர் எம்.மேசையா, தொகுதி இணை செயலாளர் வேல்சாமி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் குமாரவேல், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கணபதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய பேரவை செயலாளர் மாசேதுங், நகர அம்மா பேரவை தலைவர் முருகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் நயினார், கவுன்சிலர் உமாபதி சந்திரசேகர், ஆறுமுகம், குருவிகுளம் ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தன், தேமுதிக நகர செயலாளர் டைட்டஸ், மாவட்ட முன்னாள் இணை பொருப்பாளர் முத்துக்குமார், டங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் ராமர், விஏஓ சேது சங்கரநாராயன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நாளை (11.8.11) மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தரும் தவசுக்காட்சி நடைபெரும். இதில் தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ