ஒகனேக்கல் குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடியும்

Image Unavailable

 

சென்னை,ஆக.10 - ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் முடிக்கப்படும். 2012  ல் முதல்வர் ஜெயலலிதா அதை தொடங்கி வைப்பார் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் தரமான குடிநீர் வழங்கும் வகையில் 2010 ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்ட பணிகள் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறது. இத்திட்டத்தில் ஒகனேக்கல்லில் தினமும் 16 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து இரு மாவட்டங்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். 

கடந்த 2001 அ.தி.மு.க. ஆட்சியில் குடிநீர் வசதியில்லாத கிராமங்கள் குறித்து கணக்கெடுத்து காலவரம்பு நிர்ணயித்து குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. அதன் பிறகு புதிது புதிதாக குடியிருப்புகள் உருவாகி உள்ளது. எனவே அவற்றையும் ஆய்வு செய்து எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ