முக்கிய செய்திகள்

கடனை திருப்பி செலுத்தும் திறன் உள்ளது: ஒபாமா

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.11 - கடனை திருப்பி செலுத்தும் திறன் வலுவாக உள்ளது. நாட்டின் பொருளாதார நிலையும் வலுவாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார். அமெரிக்காவின் நிதிநிலை குறித்து ஸ்டாண்டர்ட் அன்டு பூர் தரச்சான்று நிறுவனம் கடந்த வாரம் தனது மதிப்பீட்டை வெளியிட்டது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பிய அறிக்கையில், அமெரிக்காவின் நிதிநிலை குறித்து எந்த நிறுவனம் தகுதி சான்றிதழ் அளித்தாலும் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான முதலீட்டை கொண்ட நாடு அமெரிக்காதான். அமெரிக்க பங்கு சந்தை முதலீட்டைத்தான் பாதுகாப்பான முதலீடாக இன்னமும் பலர் கருதுகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். 

அமெரிக்காவின் கடன் வரம்பை அதிகரிப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலவி வந்தது. அதன் காரணமாக அமெரிக்காவின் கடனை திருப்பி செலுத்தும் நிலையை அந்த சான்றழிப்பு நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறையவில்லை. 

இதனால் அமெரிக்க நிதிநிலையில் பிரச்சினை இல்லை என்று கூற முடியாது. நித பற்றாக்குறையை குறைப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தரச்சான்று நிறுவனம் கூற வேண்டியதில்லை என்றார். அமெரிக்க நிதி பற்றாக்குறை நடப்பாண்டில் 160 லட்சம் கோடி டாலராக இருக்கும். இதை குறைக்க செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் இதை நீண்ட கால அடிப்படையில் குறைத்து விட முடியாது என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய அதிரடி மாற்றங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இத்தகைய நிலைக்கு திட்டமிடாதது மற்றும் அரசின் கொள்கைகளோ காரணமல்ல. முடிவுகள் எடுப்பதில் காணப்பட்ட உறுதியற்ற நிலைதான் இதற்கு முக்கிய காரணமாகும் என்றார் ஒபாமா.

இதை ஷேர் செய்திடுங்கள்: