முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பரபரப்பு - ஐரணி புயல் தாக்கும் அபாயம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

நியூஜெர்ஸி, ஆக.28 - அமெரிக்காவில் நியூஜெர்ஸி, நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்களை ஐரணி புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்து தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை இரண்டு நாட்களுக்கு வாங்கி பத்திரப்படுத்தியுள்ளனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அட்லாண்டிக் கடலில் ஐரணி புயல் உருவாகியிருப்பதாகவும், இது அமெரிக்காவில் நியூஜெர்ஸி, நியூயார்க் போன்ற பகுதிகளை தாக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாயின. இந்த புயல் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நீடிக்கும் என்றும் அதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அதனால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக கடைகளில் கூட்டம் அலைமோதியது. எங்கும் புயல்பற்றிய பேச்சுத்தான். காரணம் ஏற்கனவே இதுபோன்ற புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வரலாறு உண்டு. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டனர். புயல் எச்சரிக்கை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரயில்கள், பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது. மக்கள் பீதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே அமெரிக்காவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நியூயார்க், வர்ஜீனியா, நியூஜெர்ஸி உள்ளிட்ட பகுதிகளை பூகம்பம் தாக்கியது நினைவிருக்கலாம். ஆனால் இது லேசான பூகம்பம் என்பதால் பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை. 

இத்தகவலை எமது  அமெரிக்க செய்தியாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!