முக்கிய செய்திகள்

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா கருணை காட்டாது-ஒபாமா

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், செப்.- 1 - அமெரிக்க ராணுவத்தின் 93ம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்று நமது ராணுவம் வரலாற்றுச்சாதனை புரிந்தது. இருந்தபோதும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை முழுமையாக தோற்கடிக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. அதுவரை அவர்கள் மீது கருணைகாட்ட முடியாது. தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். ஆப்கான் மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டி நமது ராணுவம் அங்கு வரலாற்று சிறப்புமிக்க போரை நடத்தி வெற்றிபெற்றுள்ளது. அது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. அமெரிக்க வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தின் மூலமே இந்த சிறப்பு மிக்க சாதனையை ஏற்படுத்த முடிந்தது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அகொய்தாவினருக்கும், தலிபான்களுக்கும் ஆதரவு அளித்ததால் தான் ஆப்கனில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் தீவிரவாதிகளிடமிருந்து விடுதலை பெற்றுள்ளனர். இதேபோல் தான் ஈராக்கிலும் அமெரிக்க படை முகாமிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாலைவனத்தை ஊடுருவிச் சென்று சர்வாதிகாரி சதாமினை அகற்றினோம். தற்போது அங்கு வன்முறை குறைந்துள்ளது. விரைவில் ஈராக் அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். தற்போது ஆப்கான் ராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி அளித்து வருகிறது. அடுத்தாண்டு முதல் அங்குள்ள ராணுவவீரர்கள் 33ஆயிரம் பேர் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு தாயகம் திரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: