முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக சையது அகமது பதவிஏற்றார்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

ராஞ்சி,செப்.- 5 - பிரபல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சையது அகமது நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் 8-வது கவர்னராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதற்கான விழா ராஞ்சியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. அதற்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் சந்திர தத்தியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழா நேற்றுக்காலை 11 மணிக்கு எளிமையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாநில முதல்வர் அர்ஜூன்முண்டா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய்,தலைமை செயலாளர் செளத்ரி, டி.ஜி.பி.கவுரிசங்கர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். புதிய கவர்னர் சையது அகமது உருதுவில் பி.எ.டி. பட்டம் பெற்றவர். ஆங்கிலம் மற்றும் இந்தியில் முதுகலை பட்டம் பெற்றவர். மும்பையில் உள்ள நாக்பாடா தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977 முதல் காங்கிரசுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த எம்.ஓ.எச்.பாரூக், கேரளாவுக்கு மாற்றப்பட்டதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்ப டாக்டர் சையது அகமது புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். 2000-ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டதுதான் இந்த ஜார்க்கண்ட் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்