எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர்,அக்.- 11 - மக்களிடம் நெருங்கி பழக வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சி தொண்டர்களை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு கூட்டணி ஆட்சி உள்ளது. பாராளுமன்றத்தை தாக்க நடந்த முயற்சியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் உமர் அப்துல்லா கோரியுள்ளார். தற்போது அரசுக்கும் மக்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும். இதற்காக கட்சி தொண்டர்கள் மக்களுடன் நெருங்கிப்பழக வேண்டும் என்று உமர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார். என் தலைமையிலான அரசு மேற்கொண்டுவரும் நலத்திட்டப்பணிகளும் அரசின் செயல்பாடுகளும் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் மக்களுடன் கட்சி தொண்டர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லது எது,கெட்டது எது என்பதை தெரிந்துகொண்டு கெட்டதை ஒதுக்க முடியும் என்றும் உமர் அப்துல்லா கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் காஷ்மீர் மாவட்ட கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உமர் அப்துல்லா மேற்கண்டவாறு கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமமான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என்று தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி அரசு குறிக்கோளாக கொண்டுள்ளது என்றும் உமர் மேலும் கூறினார். போலீஸ் காவலில் இருந்த தேசிய மாநாடு கட்சி தொண்டர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதட்டம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என்று உமர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |