முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சமாஜ்வாடி முக்கிய தலைவர் விலகல்

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,அக்.22 - உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். இதனால் சமாஜ்வாடி கட்சிக்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அமர்சிங், அந்த கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அதனையடுத்து தற்போது அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷிசு பால் சிங் யாதவ் என்பவர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். ஈத்கா சட்டமன்ற தொகுதியில் யாதவ் தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவர், காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங் மற்றும் கட்சியின் தலைவர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த யாதவ், சமாஜ்வாடி கட்சியில் இருந்து காங்கிரசில் சேர்ந்துவிட்டதாக கூறினார். ஆனால் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!