முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் கொல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,அக்.22 - மும்பையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவன் உடலை போலீசார் மீட்டியுள்ளனர். இந்த படுகொலை தொடர்பாக 3 பேர்களையும் கைது செய்துள்ளனர். மும்பையில் கவுசிக் ஜலவாடி என்ற மாணவன் தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி வீடுகளில் தங்கி படித்துவந்தான். கடந்த திங்கள் அன்று இரவு கவுசிக்கை காணவில்லை. இதுபற்றி போலீஸ்சில் கவுசிக் சகோதரர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கவுசிக் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் கவுசிக் உடலையும் கொலையாளிகளை அடையாளம் காணுவதிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ராஜப்பா ஹர் என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில் கவுசிக் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டான் மேலும் தேடுதலின்போது மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கூர்கானில்  செடிகொடிகள் அடர்த்தியாக உள்ள பகுதியில் கவுசிக் உடல் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலை போலீசார் கைப்பற்றினர். உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் 2 பேர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago