முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கனடா 5 விக்கெட் வித்தியாசத்தில் கென்ய அணியை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

டெல்லி, மார்ச். - 9  - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் கனடா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கென்ய அணியை தோற்கடித்தது. இந்த வெற்றி கனடா அணிக்கு இந்தப் போட்டி யில் முதல் வெற்றியாகும். கனடா அணி தரப்பில், கேப்டன் பகாய் மற்றும் ஹன்ஸ்ரா இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக குணசேகரா மற்றும் ரிஜ்வான் சீமா இருவரும் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, ஒசின்டே நன்கு பந்து வீசி 4 முக்கி ய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக பைத்வான் மற்றும் ரிஜ்வான் சீமா இருவரும் பந்து வீசினர். இதனால் கென்ய அணியின் ரன் ரேட் குறைந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் உள்ள பெ

ரோஷா கோட்லா மைதானத்தில் 23 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதி

ல் குரூப் ஏ யைச் சேர்ந்த கனடா மற்றும் கென்ய அணிகள் மோதின. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முன்னதாக இதில் பேட்டிங் செய்த கென்ய  அணி கனடாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 198 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் இரண்டு வீரர்கள் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

கென்ய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டி. மிஸ்ரா 73 பந்தி

ல் 51 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் டேவிசன் வீசிய பந்தில் சுர்காரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கனடா அணி தரப்பில், ஒசின்டே 26 ரன்னைக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டை எடுத்தார். பைத்வான் 31 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ரிஜ்வான் சீமா 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பாலாஜி ராவ் மற்றும் டேவிசன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

கனடா அணி 199 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிதான இலக்கை கென்ய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 45.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்னை எடுத்தது. இதனால் கனடா அணி இந்த லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியா

சத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. கென்ய அணிக்கு இது 4 -வது தொடர் தோல்வியாகும். 

கனடா அணி சார்பில் கேப்டன் பகாய் 97 பந்தில் 64 ரன்னை எடுத்தா ர். இதில் 7 பவுண்டரி அடக்கம். ஹன்ஸ்ரா 99 பந்தில் 70 ரன்னை எடுத் தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, குணசேகரா 18 ரன்னையும், ரிஜ்வான் சீமா 17 ரன்னையும் எடுத்தனர். 

கென்ய அணி தரப்பில், ஒதியாம்போ 45 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஒடியனோ மற்றும் நாச்சே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஒசின்டே தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்