கள்ள நோட்டை கண்டறிய மத்திய தடயவியல் துறை புது யுக்தி

Image Unavailable

புது டெல்லி, நவ. - 8 - நாட்டில் புழங்கும் கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த மத்திய தடவியல் அறிவியல் துறை புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளது.  இதன்படி புதிய மென்பொருள் மூலம் கள்ள நோட்டை அச்சடித்ததன் மூலாதாரத்தை கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் கள்ள நோட்டை அச்சடித்த நாடு எது என்பதையும், அச்சடித்த எந்திரத்தையும் அறிய முடியும் என்று மத்திய தடவியல் துறையின் இயக்குனர் ராஜேந்திரசிங் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே இண்டர்போல் அமைப்பினரால் பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  மேலும் இந்தியாவில் இது பயன்பாட்டுக்கு வர சிறிது காலமாகும். இப்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் நோட்டுகளின் உண்மை தன்மையை மட்டுமே சோதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ள நோட்டுகளின் புழக்கம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவர் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதென்பது கடினமென்றும், தீவிரவாதிகள் ஒரு நாட்டின் பொருளாதார சமநிலையை சீர்குலைக்க கள்ள நோட்டுகளையே பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ