முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட டைரக்டர் சீமான் புதுவை கோர்ட்டில் ஆஜர்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.16 - திரைப்பட டைரக்டர் சீமான் புதுவை கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  புதுவையில் கடந்த ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பாக சீமான் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். 

இந்த வழக்கு விசாரணை நேற்று புதுவை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையொட்டி டைரக்டர் சீமான் கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கை நீதிபதி லீலாவதி விசாரித்தார். பின்னர் வழக்கு விசாரணையை அவர் டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony