அத்வானியின் 40 நாள் யாத்திரை டெல்லியில் முடிவுக்குவந்தது

Image Unavailable

புதுடெல்லி, நவ.- 21 - கறுப்புப்பணம் மற்றும் ஊழல் பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தொடங்கிய 40 நாள் யாத்திரை தலைநகர் டெல்லியில் நேற்று முடிவுக்கு வந்தது. இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலை 11 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள் நிதின் கட்காரி, ஆனந்த குமார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி, ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத்யாதவ், அகாலிதள கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் தே.ஜ. கூட்டணி தலைவர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் ஊழல், கறுப்புப்பணம், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்கள். கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அத்வானியின் இந்த ஜனசேத்னா யாத்திரை பீகார் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 11 ம் தேதி  ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சொந்த கிராமமான சித்தாப்தியாரா என்ற கிராமத்தில் தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களைக் கடந்து இந்த யாத்திரை நேற்று டெல்லி போய் சேர்ந்தது. அதன் பிறகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ