முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் மீண்டும் புதின் அதிகாரபூர்வ அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, நவ.- 29 - ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் அடுத்த ஆண்டு (2012) மார்ச் 14ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் பிரதமர் வீளாடிமிர் புதின் போட்டியிடுகிறார். கட்சியின் கூட்டத்தில் ஏகமனதாக அதிகாரபூர்வமாக அவர் அறிவிக்கப்பட்டார். இதை தற்போதைய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அறிவித்தார். 59 வயதான புதின் ஏஷ்கனவே 2 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். ரஷ்ய அரசியல் சட்டப்படி 2 தடவைதான் தொடர்ந்து அதிபராக பதவியேற்க முடியும். எனவே கடந்த 2008 ம் ஆண்டு பதவி விலகி பிரதமரானார். அப்போது தனது தீவிர ஆதரவாளரான டிமிட்ரி மெத்வதேவை அதிபராக்கினார். தற்போது நடைபெறும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மெத்வதேவ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அதிபர் தேர்தல் வேட்பாளராக புதின் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே வரவிருக்கின்ற அதிபர் தேர்தலிலும் புதின் வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony