முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் புகார்: குவைத் பிரதமர் ராஜினாமா

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

குவைத், டிச.1 - பிரதமர் ஷேக் நாஸர் அல் முகமது அல் சபா தலைமையிலான குவைத் அரசு மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எண்ணெய் வளமிக்க நாடான குவைத் மன்னர் ஷேக் ஷபா அல் அகமது அல் சபா பரிந்துரையின் படி ஷேக் நாஸர் அல் முகமது அல் சபா கடந்த 2006ம் ஆண்டு பிரதமரானார். அவர் பிரதமராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே குவைத் அரசியலில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் நாஸர் அரசு பணத்தை கையாடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தன. மேலும் எதிர்கட்சி அமைச்சர்கள் பேரணியும் நடந்ததையடுத்து பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த மன்னர் ஷேக் ஷபா உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரதமர் நாஸர் தலைமையிலான அரசை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவின்படி நாஸர் தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. அவர்களது ராஜினாமாவை மன்னர் ஏற்றுக்கொண்டார். ஆனால் புதிய அரசு பதவியேற்கும் வரையில் நாஸர் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago