முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதவை பெண்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மதுரை,டிச.13 - இந்தியாவில் கணவன்மார்களை இழந்த விதவை பெண்கள் நலன்களுக்கு போதுமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செரீ பிளேர் குறை கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள செரீ, நேற்று கிருஷ்ண பகவான் பிறந்த மதுராவுக்கு சென்றார். அங்குள்ள பிருந்தாவனத்தில் விதவை பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாலாஜி ஆசிரமத்திற்கு சென்றும் பார்வையிட்டார். பின்னர் செரீ, நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் உலகம் முழுவதும் 25 கோடி விதவைப்பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு 50 கோடி குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்தியாவிலும் அதிகமான விதவைப் பெண்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. விதவை பெண்களுக்கு போதுமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றார். விதவை பெண்கள் சுகாதார வசதிகள் இல்லாமலும் வசிக்கிறார்கள். உலக அளவில் பிரசித்தி பெற்ற அறக்கட்டளையாக விளங்கும் லூம்பா அறக்கட்டளையின் தலைவராக செரீ இருக்கிறார். இந்த அறககட்டளையானது விதவைப்பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் கவனித்து உதவி செய்து வருகிறது. பிருந்தாவன ஆசிரமத்தில் விதவை பெண்கள் நிலைமை கவலை அளிக்கும்படி உள்ளது என்றும் செரீ மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis