முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலவீனமான லோக்பால் மசோதா: சுஷ்மா சுவராஜ்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.28 - பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா ஒரு பலவீனமான மசோதா என்றும் இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலை கமிட்டிக்கே திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். கடந்த 22 ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  லோக்பால் மசோதா மீதான விவாதம் நேற்று  லோக்சபையில் துவங்கியது.  இந்த விவாதத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.

அதன் பிறகு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,  இந்த மசோதா பலவீனமான லோக்பால் மசோதா என்றும் இதை வலுவான லோக்பால் மசோதாவாக மாற்ற இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலைக்கமிட்டிக்கே திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.எங்களது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது இந்த மசோதாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது இந்த மசோதா குறித்து மேலும் விவாதிக்க இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பி வையுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் சாசனத்திற்கு விரோதமான இந்த மசோதாவை பொறுமையுடன் நாங்கள் ஏற்க தயாரில்லை என்றும் சுஷ்மா கூறினார்.இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்  அன்னா ஹசாரேவின் அழுத்தத்தினால் இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony